மனைவி அசந்த நேரம் பார்த்து காதை அறுத்து கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிய கணவன்

 

மனைவி அசந்த நேரம் பார்த்து காதை அறுத்து கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிய கணவன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. மதுபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி, மனைவியை மிரட்டி பணம் வாங்கி தினமும் குடித்து வந்திருக்கிறார்.

மனைவி அசந்த நேரம் பார்த்து காதை அறுத்து கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிய கணவன்

நேற்றைக்கும் அது போலவே மனைவியை மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். இனிமேல் எந்த பணமும் என்னிடம் இல்லை என்று தங்கமணி கறாராக சொல்லவும், சரக்கு அடிக்காமல் இருக்க முடியாது என்று சண்டை போட்டிருக்கிறார்.

என்னிடம் எந்தப்பணமும் இல்லை. இனிமேல் குடிக்கிறதை நிறுத்திட்டு நல்ல மனுசனா இருக்குறத பாருங்க என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் தங்கமணி. இதனால் ஆத்திரம் கொண்ட பாலசுப்பிரமணி, மனைவி அசந்த நேரம் பார்த்து, தங்கமணியின் காதை அறுத்து அதிலிருந்து கம்மலை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

காது அறுந்து வலியால் துடித்த தங்கமணி, ரத்தம் சொட்ட சொட்ட வேடசந்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடினார். ரத்தம் சொட்ட சொட்ட வலியுடன் நிற்கும் தங்கமணியை பார்த்து, முதலில் நீ மருத்துவமனைக்கு போம்மா. அப்புறம் வந்து புகார் கொடுக்கலாம் என்று சொல்லி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் தங்கமணி.

பாலசுப்பிரமணி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் ஆவேசம் கொண்டுள்ளனர்.