மாணவியை இரண்டு நாட்களாக.. காதலனுடன் நண்பர்களும் கைது

 

மாணவியை இரண்டு நாட்களாக.. காதலனுடன் நண்பர்களும் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அனந்தபாலம் ஊரைச்சேர்ந்தவர் ஆல்டோ மைக்கில் டோனிக்(21). இந்த இளைஞருக்கும் வாணியக்குடியை சேர்ந்த ப்ளஸ்-1 படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது.

மாணவியை இரண்டு நாட்களாக.. காதலனுடன் நண்பர்களும் கைது

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சிறுமிக்கு ஆசைவார்த்தை அழைத்து சென்றிருக்கிறார். காதல் மயக்கத்தில் இருந்து மாணவியும் இளைஞருடன் உலக்கை அருவி மலையில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அந்த வீட்டிற்கு சென்றதும்தான் தன்னை திருமணம் செய்ய அழைத்து வரவில்லை. உறவு வைத்துக்கொள்ளவே காதலன் அழைத்து வந்த சங்கதி. காதலன் ஆசைக்கு உடன்பட மறுத்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இளைஞர்.

இதற்குள், இளைஞருடன் தனது மகள் உடுக்கை அருவி மலைக்கு சென்ற விபரம் தெரியவந்ததும், நாகர்கோவில் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாணிவியின் தாயார்.

மாணவியை இரண்டு நாட்களாக.. காதலனுடன் நண்பர்களும் கைது

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, மாணவியை மீட்டார்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின்பேரில் ஆல்டோ மைக்கில் டோனிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆல்டோ மைக்கில்டோனிக் மாணவியை கடத்தியதற்கும், பாலியல் தொந்தரவு கொடுததற்கும் உடந்தையாக இருந்த நண்பர்கள் கோட்டாரை சேர்ந்த சூர்யா, கிஷோர்குமார், காட்வின்மேஸ்வாக் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மருத்துவம பரிசோதனைகளுக்காக மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.