முன்னாள் மாணவிகளும் ஆவேசம்; ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்

 

முன்னாள் மாணவிகளும் ஆவேசம்;  ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்

பி.எஸ்.பி.பி. எனும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தியதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இரவிலும் மாணவிகளுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்ததாகவும் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் ஐந்து பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னாள் மாணவிகளும் ஆவேசம்;  ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்

இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், நிர்வாகி, ஆசிரியர் ராஜகோபாலன் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது ஆணையம். ஐந்து பேரும் ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ராஜாகோபாலனின் பாலியல் டார்ச்சர்களை சில மாணவிகள் ஒன்று கூடி பேசினாலும், நேரடியாக இதை வெளியே சொல்ல முடியாமல், பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் சொல்ல, அவர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக ராஜகோபாலன் விவகாரத்தை பரப்ப, அதன்மூலம் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆசிரியர் ராஜகோபாலன். தற்போது போக்சோவில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் மாணவிகளும் ஆவேசம்;  ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலன், என்னை மாதிரி இன்னும் நிறைய கருப்பு ஆடுகள் அந்த பள்ளியில் இருக்கின்றன என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது ஒரு புறம் இருக்க, தற்போது படித்து வரும் மாணவிகள் தவிர, முன்னாள் மாணவிகளும் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக கூறி வருகின்றனர்.

இதனால் ராஜகோபாலன் விவகாரம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.