“உன் பொண்ண கொடு இல்லேன்னா உயிரை விடு” -காதலை பிரித்த காதலியின் தந்தையை கொன்ற காதலன்

 

“உன் பொண்ண கொடு இல்லேன்னா உயிரை விடு” -காதலை பிரித்த காதலியின் தந்தையை கொன்ற காதலன்


காதலியை கல்யாணம் செய்து தர மறுத்த காதலியின் தந்தையை ஒரு காதலன் கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

வடகிழக்கு டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் வசிக்கும் சூரஜ் என்ற 28 வயதான வாலிபர் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணி புரிகிறார் .இவர் அங்கு வசிக்கும் 50 வயதான பிஜேந்தர் சிங்கின் மகளை காதலித்து வந்துள்ளார் .அந்த பெண்ணும் சூரஜ்ஜை காதலித்து வந்துள்ளார் .இவர்களின் காதல் அந்த பெண்ணின் வளர்ப்பு தந்தையான சிங்குக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர்களின் காதலை கடுமையாக எதிர்த்தார் .
இந்நிலையில் அந்த பெண் சூரஜைதான் கட்டிக்குவேன் என்று பிடிவாதமாக இருந்தார் .அதனால் சிங் அந்த பெண்ணை அவரின் பெற்றோரிடம் கொண்டு போய் விட்டு விட்டார் .இதையறிந்த சூரஜ் அந்த பென்னை கல்யாணம் செய்து தர கேட்டு அந்த பெண்ணின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார் .இதையரிந்த சிங் மீண்டும் அங்கும் வந்து சூரஜ்க்கு அந்த பெண்ணை கட்டி கொடுக்க வேண்டாமென்று கூறியுள்ளார் .இதனால் கோபமுற்ற சூரஜ் அந்த காதலியின் வார்ப்பு தந்தையான சிங்கை ஒரு கத்தியாலும் சுத்தியாலும் தாக்கி படுகொலை செய்துள்ளார் .அதன் பிறகு அந்த பெண்னின் தாயாரையும் கொல்ல முயன்றுள்ளார் .இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள் .பின்னர் , குற்றம் சாட்டப்பட்ட சூரஜ் தப்பி ஓடுவதற்கு முன்பு, போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, ​​திருமண முன்மொழிவை மறுத்ததற்காக சிறுமியின் தந்தையை கொலை செய்ய ஒரு திட்டத்தை உருவாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டார் .

“உன் பொண்ண கொடு இல்லேன்னா உயிரை விடு” -காதலை பிரித்த காதலியின் தந்தையை கொன்ற காதலன்