20 வயது காதல் மனைவியை குத்திக்கொன்ற 19 வயது காதல் கணவன்!

 

20 வயது காதல் மனைவியை குத்திக்கொன்ற 19 வயது காதல் கணவன்!

காதல் மனைவி பெற்றோரை விட்டு வர மறுத்ததால் அவரது கணவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயது காதல் மனைவியை குத்திக்கொன்ற 19 வயது காதல் கணவன்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரும் சிந்தமாக்குலா பள்ளியை சேர்ந்த டில்லி பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். டில்லிபாபுக்கு 19 வயதாகும் நிலையில் காயத்ரிக்கு 20 வயதாகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர காயத்ரியும் டில்லிபாபுவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் , டில்லிபாபுக்கு 19 வயதே ஆவதால் இருவரும் அவரவர் வீட்டில் தனி தனியாக வசிக்கும்படியும், உரிய வயது வந்தவுடன் சேர்ந்து வாழலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

20 வயது காதல் மனைவியை குத்திக்கொன்ற 19 வயது காதல் கணவன்!

இதை மணமகள் குடும்பத்தாரும், மணமகளும் ஏற்றுக்கொண்ட நிலையில் டில்லிபாபு காயத்ரியை அவரது வீட்டிற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தார். இதனால் காயத்ரியை தனது வீட்டிற்கு வருமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும் காயத்ரி, டில்லி பாபு உடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த டில்லி பாபு, காயத்ரியின் வீட்டிற்கு சென்று, தான் மறைத்து வைத்திருந்த காயத்ரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டில்லி பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்