11ம் வகுப்பு மாணவி 8 மாத கர்ப்பம் - தந்தை சிறையிலடைப்பு

 
ட்

 பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததில் 8 மாத கர்ப்பமாக இருக்கிறார் சிறுமி.  போலீசாருக்கு இது தெரியவந்ததும் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை.   இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.   இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.   இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.  

ய்

 சிறுமியின் தாயார் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார் .  சிறுமியின் தங்கை பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 16 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் ஏழுமலை.   இந்த கொடூர செயலை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார் சிறுமி. 

 இந்த கொடூர செயலை செய்தது தந்தைதான் என்பதை எப்படி எல்லோரிடமும் சொல்வது என்று தவித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.   இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். 

அண்மையில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.  அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.   இதையடுத்து மருத்துவர்கலே 16 வயது சிறுமி ஒருவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க,  அம்பத்தூர் மகளிர் ஆய்வாளர் ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியதில் தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது தந்தை ஏழுமலை தான் என்பதை சொல்லி இருக்கிறார் சிறுமி.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர்,  ஏழுமலையை இன்று கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.