செப்டிக் டேங்க் சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள் மூவர் பரிதாப பலி: கோவையில் சோக சம்பவம்!

 

செப்டிக் டேங்க் சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள் மூவர் பரிதாப பலி: கோவையில் சோக சம்பவம்!

மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலநிலை இன்னும் கூட நம் நாட்டில் நிலவி வருகிறது

கோவை: செப்டிக் டேங்க் சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலநிலை இன்னும் கூட நம் நாட்டில் நிலவி வருகிறது. அந்த வகையில், கோவை  கீரநத்தம் பகுதியில் உள்ள கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு பணியாளர்கள் செப்டிக் டேங் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பணியிலிருந்த ஒருவரை  திடீரென விஷவாயு தாக்கியதையடுத்து அவரை காப்பாற்ற முற்பட்ட மீதமுள்ள 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

kovai

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளைச் செய்யவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தாலும் இது போன்ற உயிர்ப்பலிகளோ வாடிக்கையாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது