“கடைசியில கலெக்டர் வீட்டிலே கைவரிசைய காமிச்சிட்டிங்களே “17 லட்சம் நகைகள் துணிகர கொள்ளை

 

“கடைசியில கலெக்டர் வீட்டிலே கைவரிசைய காமிச்சிட்டிங்களே “17 லட்சம் நகைகள் துணிகர கொள்ளை

கடலூர் மாவட்ட ஆட்சி தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன் .இவர் தனது குடும்பத்தோடு கடலூர் கலெக்டர் குடியிருப்பில் வசிக்கிறார் .இவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு யாரோ சில மர்ம நபர்கள் புகுந்து 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒரு  கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அன்புச்செல்வன் வீட்டில் 17 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

kadalur collector

கடலூர் மாவட்ட ஆட்சி தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன் .இவர் தனது குடும்பத்தோடு கடலூர் கலெக்டர் குடியிருப்பில் வசிக்கிறார் .இவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு யாரோ சில மர்ம நபர்கள் புகுந்து 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் . வீட்டில் ஒரு காவலாளியை வேலைக்கு வைத்திருந்தும் ,அவர் வீட்டின் முன்பக்கம் தூங்கியபோது ,வீட்டின் பின்பக்க கதவை உடைத்த சில நபர்கள் நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர் .அந்த வீட்டின் காவல்காரர் செல்வம் சனிக்கிழமை காலை இந்த விஷயத்தை போலீசுக்கு தெரிவித்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்