பிரபல நீச்சல் வீரர் விபத்தில் மரணம்: விடுமுறைக்காக வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

 

பிரபல நீச்சல் வீரர் விபத்தில் மரணம்: விடுமுறைக்காக வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர் பாலகிருஷ்ணன். சென்னையைச் சேர்ந்த இவர் ஷெனாய்நகரில் தந்தை  பத்ரிநாத்துடன் வசித்து வந்தார்.  
இதையடுத்து அமெரிக்காவுக்குச் சென்ற அவர் அங்கு  என்ஜினியராக பணிபுரிந்து  வருகிறார்.

bala

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 
பாலகிருஷ்ணன் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதையடுத்து  நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனது தோழியுடன் சென்றுள்ளார் பாலகிருஷ்ணன். அப்போது  கான்கிரீட் கலக்கும் லாரியில் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த  பாலகிருஷ்ணன் பின்பக்க சக்கரத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். 

bala

இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  படுகாயமடைந்த அவரது தோழியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து பாலகிருஷ்ணனின் உடல்  பிரேத பரிசோதனைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது விபத்தா? அல்லது கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.