சிறுமிக்கு சினிமா ஆசைகாட்டி பலாத்காரம் ! விபச்சார கும்பலில் இருந்து தப்பி விஷம் குடித்த பரிதாபம் !

 

சிறுமிக்கு சினிமா ஆசைகாட்டி பலாத்காரம் ! விபச்சார கும்பலில் இருந்து தப்பி விஷம் குடித்த பரிதாபம் !

பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி சிறுமி மட்டும் குடும்பத்தார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாரணாசியில் நடைபெற்றது. உத்தர பிரதேசம் வாரணாசியில் அக்டோபர் 19 ம் தேதி 5 சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்து எங்கே செல்கிறீர்கள் என ஜமீர் மற்றம் உத்கர்ஷ் என்ற இளைஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் மும்பைக்கு செல்கிறோம் என கூறியுள்ளனர். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி சிறுமி மட்டும் குடும்பத்தார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வாரணாசியில் நடைபெற்றது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் அக்டோபர் 19 ம் தேதி 5 சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்து எங்கே செல்கிறீர்கள் என ஜமீர் மற்றம் உத்கர்ஷ் என்ற இளைஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் மும்பைக்கு செல்கிறோம் என கூறியுள்ளனர். 
அப்போது தன்னை டிக்கெட் பரிசோதகர் என அறிமுகம் செய்து கொண்ட ஜமீர், பாலிவுட்டில் தனக்கு நிறைய பேரை தெரியும் என்றும், நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். 4 சிறுமிகள் மறுப்பு தெரிவிக்கவே அவர்களை நம்பி 17 வயது சிறுமி மட்டும் சென்றுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறுமி தங்க வைக்கப்பட்டார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தான் நிர்வாண கோலத்தில் இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அப்போதுதான் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.  இதற்காக அவர்கள் முந்தைய நாள் இரவு உணவில் மயக்க மருந்து கலந்துள்ளனர். மேலும் அந்த சிறுமியை ஒரு விபச்சார கும்பலிடம் விற்றுவிட்டு அந்த 2 பேரும் தப்பி உள்ளனர்.

girl harassed

கடைசியாக ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்ற சிறுமி நவம்பர் 15 ஆம் தேதி வாரணாசிக்குத் திரும்பினார். இந்த வழக்கு கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். 
இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாகக் கூறி சிறுமி, அவரது பெற்றோர் வாரணாசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வெளியே விஷம் குடித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.