“சிபிஐ ல வேலை கிடைச்சும் சேர முடியலே ” -பொண்டாட்டி புகாரால் ஐபிஎஸ் அதிகாரி அவஸ்தை

 

“சிபிஐ ல வேலை கிடைச்சும் சேர முடியலே ” -பொண்டாட்டி புகாரால் ஐபிஎஸ் அதிகாரி அவஸ்தை

ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியின் புகாரால் ,கணவரின் பதவி உயர்வு தடைப்பட்டது அதிகாரிகள் மட்டத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது .

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு சிபிஐ யில் தலைமை பொறுப்புக்கு பதவி உயர்வு கொடுத்து நியமிக்கப்பட்டார் .ஆனால் அவரின் மனைவி உள்துறை அமைச்சகத்திடம் சென்று தன்னுடைய கணவன் பெண் பித்தர், அதனால் அவருக்கு ப்ரோமோஷன் தரக்கூடாது என்றுகூறியதால் அவர் அந்த பதிவிலிருந்து நீக்கப்பட்டார் .
மேலும் அந்த மனைவியும் கஸ்டம்ஸ் துறையில் பணிபுரிகிறார் .அவர் தன்னுடைய கணவன் பற்றி கூறுகையில், அவரை ஏற்கனவே 2008ம் ஆண்டு லக்னோவில் அதிகாரியாக பணி புரிந்த போது அங்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியோடு கள்ள தொடர்பிலிருந்ததால் , அந்த விவகாரம் வெளியே தெரிந்து அங்கு மன்னிப்பு கேட்ட பிறகு அவரை மீண்டும் பணியில் சேர்த்தார்கள் .மேலும் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பல பெண்களிடம் அவர் உல்லாசமாக இருக்கிறாரென்றும் ,பிறகு ஒரு விவாகரத்தான பெண்ணோடும் அவர் கள்ள தொடர்பிலிருக்கிறார் என்றார் .அவருடனான போட்டோக்களையும் ,செல்போன் சாட்டிங் விவரம் தன்னிடம் இருப்பதாகவும் ,அதை தாம் உள்துறை அமைச்சகத்திடம் காமித்ததால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கினார்கள் என்று கூறினார் .இதனால் ஒரு மனைவியின் புகாரால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் பதவி உயர்வு தடை பட்டது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது ,

“சிபிஐ ல வேலை கிடைச்சும் சேர முடியலே ” -பொண்டாட்டி புகாரால் ஐபிஎஸ் அதிகாரி அவஸ்தை