பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

 

பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் இவர்களை வலுக்கட்டாயமாக வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் மாடுகளைக் கடத்திச் செல்வதாக சந்தேகப்பட்டு அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது அந்த கும்பல் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ஆவணங்களையும் மொபைல் போன்களையும் பறித்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் வருவதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது. காவல் துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாபு லால் பில் உயிரிழந்தார். பிந்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

இந்நிலையில் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்ட ஐ.ஜி. சிங், இது தொடர்பாக சிலரை நாங்கள் பிடித்து விசாரணை நடத்திவருகிறோம். இதில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் தப்பிக்கமாட்டார்கள், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளோம். விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யபடுவர் என்றார். இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து மனித உயிர்களை அடித்து கொல்வது தொடர்கதையாகிவருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.