ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவி: நாக்கை கத்தியால் அறுத்த கணவன்!

 

ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவி: நாக்கை  கத்தியால் அறுத்த கணவன்!

தஸ்லீமை மீட்ட அவரது சகோதரி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அகமதாபாத்: முத்தம் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அவரது கணவர் துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்  அன்சாரி. இவரது மனைவி தஸ்லீம்.  அன்சாரி வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

husband

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல கணவனும் மனைவியும் சண்டை போட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து சமாதானம்  ஆன மனைவி அன்சாரிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தஸ்லீமின் நாக்கை பிடித்து இழுத்த அவரது கணவர், கையில் வைத்திருந்த கத்தியால் நாக்கை அறுத்துள்ளார்.  இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த தஸ்லீம் அவரது சகோதரிக்கு வீடியோ கால் செய்துள்ளார். 

tongue

இதையடுத்து தஸ்லீமை மீட்ட அவரது சகோதரி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு  அவருடைய நாக்கு அறுவை சிகிச்சை மூலம்  மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்சாரியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.