அற்ப காரணத்திற்காக பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

அற்ப காரணத்திற்காக பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

தூங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தாய் ஒருவர் இரக்கமின்றி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆலப்புழா: தூங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தாய் ஒருவர் இரக்கமின்றி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள பட்டனாகாட்டைச் சேர்ந்தவர்  ஷாரோன். இவர் 24 வயதான ஆதிரா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 
15 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.

baby

சில தினங்களுக்கு முன்பு குழந்தை நீண்ட நேரம் ஆகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை எழாததால் அதிர்ச்சியடைந்த ஷாரோன் குடும்பத்தினர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது தெரியவந்தது. 

crime

இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஆதிரா வீட்டினருகே சென்று விசாரித்துள்ளனர்.  அதில் ஆதிரா அடிக்கடி குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதாகத் தகவல் கிடைத்தது. இதனால் ஆதிராவை விசாரித்ததில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதில், அழுதுகொண்டே இருந்த குழந்தையை தூங்க வைக்க முயற்சிதுள்ளார் ஆதிரா. ஆனால் அம்முயற்சியில்  தோல்வி அடைந்ததால் ஆத்திரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

murder

தூங்கவில்லை என்ற அற்ப காரணத்திற்காக பச்சிளம் குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.