பல மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தம் ! மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நடிகை !

தொலைக்காட்சி நடிகை பிரேக்ஷா மேத்தா மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். க்ரைம் ரோந்து, மேரி துர்கா, மற்றும் லால் இஷ்க் ஆகிய தொடர்கள் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரேக்ஷா மேத்தா. பிரேக்ஷா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது இன்ஸ்டாகிராமில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளர் அவர் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பிரீக்ஷா மேத்தா தற்கொலைக்கான காரணத்தை அறிய போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்டட விசாரணையில் பிரேக்ஷா மேத்தா ஒரு தொலைக்காட்சி நடிகை, அவர் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்ததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரேக்ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு ஏக் பிரேம் கதா மற்றும் ஜட்ஜ்மென்டல் ஹை க்யா புகழ்பெற்ற நடிகை ரிச்சா திவாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி நடிகர் மன்மீத் க்ரூவால் வேலையின்மை மற்றும் பணம் பிரச்சனை காரணமாக தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார், இப்போது 25 வயதான பிரேக்ஷா மேத்தா மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி திட்டங்களின் படப்பிடிப்புகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.;

Most Popular

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி.. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி பேரம்… பா.ஜ.க. மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை விட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதனால் பா.ஜ.க.வால்...

ராகுல், பிரியங்கா காந்தியை பாராட்டமாட்டீர்கள் என்றால் ஏன் காங்கிரசில் இருக்கிறீர்கள்?… திக்விஜய சிங் ஆவேசம்

தேசிய நலன் விவகாரங்கள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகள் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் உத்தர பிரதேச...

இந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்

புதிய தலைமை செயலகம் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலா தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகராக விளங்கும் ஹைதராபாத்தில் உள்ள பழைய தலைமை செயலகத்தை இடித்து விட்டு ரூ.400...

பீகாரில் இப்போது தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது… தேர்தலை ஒத்திவைக்க பஸ்வான் கட்சி ஆதரவு

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதனால் அக்டோபர் மாதத்தில் பீகாரில் புதிய...
Open

ttn

Close