“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்

“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்

வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கிய கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .

“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்

மகாராஷ்டிராவில் மும்பையில் பிரதீப் மவுரியா என்பவர் ,முன்பு ஒரு தனியார் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றியதன் மூலம் வங்கியில் கடன் வழங்குதலில் இருக்கும் வழிகளை தெரிந்து கொண்டார் .அப்போது அங்கு பணியாற்றிய சிலரை தன்னுடைய ஊழலுக்கு துணை போக வைத்தார்

அதனால் அவர் அந்த வங்கியிலிருந்து வெளியேறியதும்  மும்பை, இந்தூர், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வங்கிகளில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, மினி கூப்பர் உள்ளிட்ட  19 கார்களை நூதனமான முறையில் வங்கியை ஏமாற்றி வாங்கினார் .

அவரின் பிளான் படி போலியாக வருமான சான்றிதழ் ,ஆதார் கார்டு ,இருப்பிட சான்று போன்றவைகளை சிலரின் பெயரில் தயாரிப்பார் .பின்னர் அதை வங்கியில் சமர்ப்பித்து அவர்களின் பெயரில் அந்த கார்களை ஷோ ரூமிலிருந்து டெலிவரி எடுப்பார் .பிறகு  அந்த கார்களை பலரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டு தலை மறைவாகிவிடுவார் .அல்லது கார் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று விடுவார் .இந்த மோசடி பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் ரகசியமாக அவரையும் அவரின் கூட்டத்தினரையும் கண்காணித்து அவர்களை கடந்த வாரம் கைது செய்து அவர்களிடமிருந்து 7 கோடி மதிப்பிலான கார்களை பறிமுதல் செய்தார்கள் 

இந்த மோசடி கூட்டத்தில் பிரதீப் தலைமையில் செயல்பட்ட  தரம்பீர் ஷர்மா , ஷேக் , கவுடா, மிருகேஷ் நவிதர் , சாய்நாத் கஞ்சே , பிரதீப் மவுரியா , தில்ஷாத் அன்சாரி , விஜய் வர்மா  மற்றும் சல்மான் கான் ஆகிய ஏழு பேர் மீது  போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .

“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்