’முழு ஓய்வு’ அறிவித்தார் கிரிக்கெட்டர் பார்திவ் பட்டேல்

 

’முழு ஓய்வு’ அறிவித்தார் கிரிக்கெட்டர் பார்திவ் பட்டேல்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது என்பதே பெரிய விஷயம். அதிலும் விக்கெட் கீப்பராக இடம்பிடிப்பது இன்னும் சவால் நிறைந்தது. ஏனெனில், பவுலிங், பேட்டிங் ஆகியவற்றில் நான்கு பேர்கள் வரை அனுமதி இருக்கும். ஆனால், விக்கெட் கீப்பர் ஒருவர்தான் என்பதால், அதில் இடம்பெற கடும்போட்டி இருக்கும். அதை மீறியும் தனக்கான இடத்தை நிலைநிறுத்தியவர் பார்தீவ் பட்டேல்.

இந்திய விக்கெட் கீப்பர்களில் நயன் மோங்கியாவுக்குப் பிறகு நிலையான இடம் கிடைத்தது பார்தீவ் பட்டேலுக்குத்தான். 2003 லிருந்து இவர் இந்திய அணியில் இருந்து வந்தார்.

’முழு ஓய்வு’ அறிவித்தார் கிரிக்கெட்டர் பார்திவ் பட்டேல்

27 ஒருநாள் போட்டிகளில் கீப்பராக விளையாடிய பார்தீவ் 30 கேட்ச்களைப் பிடித்துள்ளார். 25 டெஸ்ட் மேட்ச்களிலும் விளையாடி உள்ளார். அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும்போது ரன்கள் அடித்தும் உதவியுள்ளார்.

அதன்பின், சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி அணி, டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் அணி என ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்றார். 2020 ஆம் ஆண்டில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

’முழு ஓய்வு’ அறிவித்தார் கிரிக்கெட்டர் பார்திவ் பட்டேல்

மிக நல்ல கீப்பர் எனப் பெயர் எடுக்கும்முன்பே தினேஷ் கார்த்திக் உள்ளே நுழைந்தார். அதன்பின் தோனியின் வருகை நிகழ்ந்தது. அதற்குபின் இந்திய அணியில் எந்த விக்கெட் கீப்பருமே நுழைய முடியவில்லை.

தோனி பேட்டிங், கேப்டன்ஷிப் என வேற லெவலில் அவர் வளர்ந்துகொண்டிருந்தார். தோனியின் பெரும் வெளிச்சத்தில் கரைந்துபோன விக்கெட் கீப்பர்களில் பார்தீவ் பட்டேலும் ஒருவர்.

இன்று பார்தீவ் பட்டேல், அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் முழுமையாக ஓய்வை அறிவித்துள்ளார்.