உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

கோவை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, கோவையில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் இன்று நடைபெற்றது. முமா.சண்முகசுந்தரம் அறக்கட்டளை சார்பில் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 64 அணிகள் பங்கேற்றன.
போட்டியில் வெல்பவர்களுக்கு ரொக்கப்பரிசும், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

இதனையொட்டி நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் கலந்துகொண்டு, கிரிக்கெட் போடடிகளை துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் அதிமுக ஆட்சியில் மோசமான நிலையில் உள்ளதாகவும், விரைவில் இந்த ஆட்சி விரட்டி அடிக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.