’அதானிக்கு எதிர்ப்பு’ ஆஸ்திரேலிய மைதானத்தில் பதாகை ஏந்திய ரசிகர்கள்

 

’அதானிக்கு எதிர்ப்பு’ ஆஸ்திரேலிய மைதானத்தில் பதாகை ஏந்திய ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளும் ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் ஆட முடிவெடுத்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், பார்வையாளர்கள் முன்கூட்டியே வந்துவிட்டார்கள்.

’அதானிக்கு எதிர்ப்பு’ ஆஸ்திரேலிய மைதானத்தில் பதாகை ஏந்திய ரசிகர்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் முன் ஆடவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஆட்டம் தொடங்கியது. அப்போது ஒரு ரசிகர் கையில் பதாகை ஏந்தியபடி மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் பதாகை ஏந்தி நுழைந்தனர்.

காவலர்கள் உடனே அவரை விரட்டி, வெளியேற்றினர். ஆனால், அந்த ரசிகர்கள் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தாரோ அதை உலகிற்குச் சொல்லிவிட்டார்கள்.

’அதானிக்கு எதிர்ப்பு’ ஆஸ்திரேலிய மைதானத்தில் பதாகை ஏந்திய ரசிகர்கள்

இந்தியாவின் தொழிலதிபர் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க அமைத்து வருகிரார். இதற்கு அங்குள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதானி நிறுவனம் தம் பணிகளை கைவிடுவதாக இல்லை. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா வங்கி அதானிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுக்கும் முடிவை எடுத்திருந்தது. அதானிக்கும் கடன் கொடுக்கும் வங்கிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போரட்டக்காரர்கள் மைதானத்தில் கலகம் செய்தார்.

இது உலகம் முழுவதுமே பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள மக்களின் பார்வைக்கு இதன்மூலம் சென்றிருக்கிறது.