கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் ஏஜெண்டுகள் மாதிரி துரத்தும் திமுக! அலறும் முக்கிய பிரமுகர்கள்!

 

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் ஏஜெண்டுகள் மாதிரி துரத்தும் திமுக! அலறும் முக்கிய பிரமுகர்கள்!

முன்பெல்லாம் புதிய நம்பர் எதுவும் வந்தால், கிரெடிட்கார்டு, பர்சனல் லோன் கேட்டு எவனோ போன் பண்றான்ப்பா என்று எரிச்சல் அடைவார்கள். ஆனால், இப்போது புதிய நம்பர் வந்தால், ‘’அய்யோ திமுக ஏஜெண்ட் போன் பண்றான்ப்பா’’என்று அலறுகிறார்கள் முக்கிய பிரமுகர்கள்.

கடந்த இரண்டு முறையும் அதிமுகவே வந்துவிட்டதால் கடுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலிலாவது ஆட்சியைப்பிடித்துவிட வேண்டும் என்ற
முனைப்பில் இருக்கிறார். இதற்காகத்தான் பிரசாந்த் கிஷோரின் ஐ- பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். ’ஐ- பேக்’கும் சென்னையில்
அலுவலகத்தை தொடங்கி, ஆட்களை நியமித்து தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறது.

கருணாநிதி இல்லாத நிலையிலும் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை திமுக கைப்பற்றியது. கருணாநிதி இல்லாததால்
ஸ்டாலினால் ஒன்றும் செய்யமுடியாது; திமுக அவ்வளவுதான் என்ற பேச்சு எல்லாம் அந்த வெற்றியில் தவிடுபொடியானது. திமுகவுக்கு செல்வாக்கு கூடியது.
ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததும் திமுக மீதான இமேஜ் உடைந்தது. கருணாநிதி இல்லாத
தேர்தலை சந்திக்க ஸ்டாலினால் முடியாது என்ற பேச்சு மீண்டும் எழுந்தது. இதை சரிகட்ட, கட்சிக்கு வலு சேர்க்க பிரசாந்த் கிஷோருடன் கை கோர்த்தார்
ஸ்டாலின்.

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் ஏஜெண்டுகள் மாதிரி துரத்தும் திமுக! அலறும் முக்கிய பிரமுகர்கள்!

நரேந்திரமோடி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி, அம்ரீந்தர் சிங் ஆகியோருக்கு தேர்தல் பணியாற்றி வெற்றியை தேடிக்கொடுத்த
பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினுக்கும் அந்த வெற்றியை கொடுக்கும் தீவிரத்தில் இருக்கிறார். இதற்காக அவர் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் ஒன்றாக, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் செல்வாக்கு உள்ள நபர்களை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ளது பிரசாந்த் கிஷோரின்
ஐ-பேக்.

இதற்காக, ஒவ்வொருவரிடமும் பேசி ஸ்டாலினுடன் இணைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது ஐ-பேக் அலுவலர்களுக்கு. அந்த
அலுவலர்களும், கிரெடிட் கார்டு, சிம் கார்டு, பர்சனல் லோன் வேணுமான்னு கேட்டு ஏஜெண்டுகள் நச்சரிப்பது மாதிரி, இந்த ஏஜெண்டுகளும் நச்சரிப்பதால் பலரும்
எரிச்சலில் இருக்கிறார்கள்.

அல்வாவுக்கு பெயர்போன மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு உள்ளவரிடமும் இப்படி போன் போட்டு நச்சரிக்க, திமுகவுக்கு ஏன் இந்த வேலை? என்று போட்டு
காய்ச்சி எடுத்திருக்கிறார். அந்த ஆடியோ பலரது செல்போன்களில் மெல்ல பரவுகிறது.

அந்த ஆடியோவில், ‘’சார், நீங்க செஞ்சுக்கிட்ட வர்ற நல்ல காரி்யம் தலைவருக்கு தெரியவந்துச்சு’’என்று ஐபேக் அலுவலர் சொல்ல ஆரம்பிக்க, இடைமறித்து,
’’தலைவருக்கு நல்லது கூட கண்ணுக்கு தெரியுதா?’’ என்று எதிர்கேள்வி கேட்கிறார் எதிர்முனையில் இருப்பவர்.

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் ஏஜெண்டுகள் மாதிரி துரத்தும் திமுக! அலறும் முக்கிய பிரமுகர்கள்!
’’மக்களுக்கு நல்லது செஞ்சுக்கிட்டு வர்றீங்க. நீண்ட காலமாக மக்களோட நல்ல தொடர்புல இருக்கீங்க. உங்களோடு களத்தில் சந்திக்க, உங்களோட கைகோர்க்க தலைவர் விரும்புறாரு. நீங்க விரும்புறீங்களா? ’’என்று கேட்க, ‘’ஓ! உங்க தலைவருக்கு நல்லது எல்லாம் கூட தெரியுதா? நல்லது செய்யுறவங்களையும் கூட தெரியுதா?’’என்று மீண்டும் கேட்டுவிட்டு, ‘’சத்தியமா விரும்பல..போதுமா! நாங்க நல்ல காரியம் செஞ்சுக்கிட்டு இருக்குறோம்.
நல்லவங்களோட தொடர்புகொள்ளத்தான் விரும்புவோம். திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல மனிதரே கிடையாது. ஒரு முழுமையான தேசதுரோகி. இந்து துரோகி. அவர் கூட எந்தகாலத்திலும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டோம்’’என்று ஒரே போடாக போட்டுவிட்டு,

’’இப்படி எல்லாம் என்னை மாதிரி பலருகிட்ட கேட்டு, ஸ்டாலினை நல்லவர் மாதிரி காட்டி ஓவரா பில்டப் கொடுக்காதீங்க. அவுங்க கொடுக்குற  காசுக்காகத்தான் நீங்க இந்த வேலையை பார்க்குறீங்க. யார் காசு கொடுத்தாலும் யார்கிட்ட வேணும்னாலும் வேலை பார்க்கக்கூடாது. எதுக்காக வேலை செய்யுறோம்னும் யோசிக்கணும். இப்படிப்பட்ட மோசமான பேர்வழிகளுக்கு இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்யாதீங்க. ஸ்டாலினை தூக்கிப்பிடிக்கிறேன்னு உங்களோட வாழ்க்கையை நீங்க கெடுத்துக்காதீங்க. இந்துமதத்துக்கான முழுமையான துரோகி ஸ்டாலின். நீங்களும் இந்துவாகத்தான் இருப்பீங்க. இன்னைக்கு அவுங்க கொடுக்குற அஞ்சு, பத்து காசுக்காக ஆசைப்பட்டு நாட்டை காட்டிக்கொடுத்துறாதீங்க’’என்று கடுமையாக சொல்லவும், ’’சரி
சார், சரி சார் ’’என்று அசடு வழிகிறார் ஐ -பேக் அலுவலர்.

இப்போதெல்லாம் புதிய நெம்பர் எதுவும் வந்தாலே, திமுக ஏஜெண்ட்தான் போன் பண்ணுவதாக நினைத்து அலறுகிறார்கள் முக்கிய பிரமுகர்கள். அதனாலேயே,
திமுகவுக்கு ஏன் இந்த வேலை? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.