‘பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதல்’: விரைவு ரயில் நிறுத்தம்!

‘பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதல்’: விரைவு ரயில் நிறுத்தம்!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதியதால், சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதல்’: விரைவு ரயில் நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேஸ்வரம் தீவு பகுதி இடையில் சுமார் 2.2 கி.மீ தூரத்தில் பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், அதன் உறுதித் தன்மை குறித்து கேள்வி எழுந்தது. இதன் காரணமாக, ரூ.250 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக புதிய பாலம் அமைக்கும் பணி தொய்வடைந்த நிலையில், அண்மையில் கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கியது.

‘பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதல்’: விரைவு ரயில் நிறுத்தம்!

இந்த நிலையில், புதிய பாலம் அமைக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேனுடன் கூடிய மிதவை பாம்பன் பாலத்தின் மீது நள்ளிரவில் மோதியது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கிரேன் மோதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்துடன் மோதிய கிரேனை படகுகளை கொண்டு மீட்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.