பட்டாசு வெடிக்கத் தடை தொடரும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

 

பட்டாசு வெடிக்கத் தடை தொடரும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

வட மாநிலங்களில் நிலவும் கடும் காற்று மாசுப்பாட்டை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதித்தது.

பட்டாசு வெடிக்கத் தடை தொடரும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மேலும், உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்கு நேரக்கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பட்டாசு வெடிக்கத் தடை தொடரும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

அந்த வகையில், காற்று மாசுபாடு மற்றும் கொரோனா நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் ஒட்டு மொத்தமாக தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பட்டாசுக்கான தடையை நீட்டிப்பதாக பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. அதாவது, காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்றும் காற்றின் தரம் நடுத்தரமாக இருக்கும் நகரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் போது இரவு 11:55 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை பசுமை பட்டாசுகள் வெடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்குறிப்பிட்டுள்ளது.