• August
    25
    Sunday

Main Area

Main



அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்!  இரண்டாக பிளந்த சாலை!

road
road
Loading...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் இரண்டாக பிளந்தது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் அந்த 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேர்ந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 170 முறை நில அதிர்வும் ஏற்பட்டு கலிபோர்னியா பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அவசர நிலையை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்தன. 

நிலநடுக்கத்திற்குப் பின்பும் சில இடங்களில் அதிர்வுகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 10 மில்லியன் டாலர் முதல் 100 மில்லியன் டாலர் வரை இழப்புகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கலிபோர்னியாவின் ரிட்ஜெக்ரெஸ்ட் அருகே உள்ள சாலையில் ஒரு விரிசல் காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக நிலநடுக்காதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 

2018 TopTamilNews. All rights reserved.