விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசாங்கம் தவறி விட்டது… சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

 

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசாங்கம் தவறி விட்டது… சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 14 கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 முதல் 83 சதவீதம் வரை உயர்த்தியது. 2020-21ம் நிதியாண்டுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.1,868ஆக உயர்த்தியது. அதேபோல் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.260 உயர்த்து ரூ.5,515ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளின் வருமானம் சிறிது அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசாங்கம் தவறி விட்டது… சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மத்திய அரசின் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: இது பெரிய பொய்யாக இருக்காது. கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது என்ன மற்றும் இன்று அறிவிக்கப்பட்டது குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்பது குறித்த விவரங்கள் என்னிடம் உள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசாங்கம் தவறி விட்டது… சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு வெறும் ரூ.53 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையிலான உற்பத்தி செலவினம் தற்போது அறிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை காட்டிலும் அதிகமாகும். கோவிட்-19 மற்றும் லாக்டவுனால் ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. லாக்டவுனால் விவசாயிகளால் எங்கேயும் விற்பனை செய்ய முடியாது அதனால் அவர்கள் அரசிடம் விற்பனை செய்கிறார்கள். இதனால் தற்போது பம்பர் கொள்முதல் செய்துள்ளதாக அரசு சொல்கிறது. இது வழங்குபவர்களுடான நேரடி மோசடி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.