Home இந்தியா பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றினால் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் - இரா.முத்தரசன்

பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றினால் இவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் – இரா.முத்தரசன்

இந்திய ரயில்வே நிர்வாகத்தில் சில மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ரயில்களை விரைவு ரயில்களாக்குவது. அதற்கான விதிகள் பொதுமக்களைப் பாதிக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

“இந்திய ரயில்வே வாரியம் நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் பயணிகள் ரயில்களில் 500 க்கும் மேற்பட்ட ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எந்தக் காரணம் கொண்டும் 200 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி செல்லும் ரயில்களைப் பயணிகள் ரயில்காளாக அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டிலும், தென்னக ரயில்வே நிர்வாகத்திலும் இயங்கி வரும் 40 பயணிகள் ரயில்கள், உடனடியாக விரைவு ரயில்களாக மாறும் எனத் தெரிய வருகிறது.
இந்திய ரயில்வே வாரியத்தின் உத்தரவு மக்கள் உணர்வுகளையும், அனுபவங்களையும் பற்றி ஒரு துளியும் கவலைப்படவில்லை.

தற்போது கேரள மாநிலம் பாலக்காடு முதல் திருச்சி வரையிலும், ஈரோடு முதல் திருநெல்வேலி வரையிலும் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இனிமேல் விரைவு ரயில்களாக மாறும். இதனைத் தொடர்ந்து இந்த ரயில்கள் நின்று, செல்லும் இடங்கள் குறைக்கப்படும், கட்டணங்கள் 5 அல்லது 6 மடங்கு வரை அதிகரிக்கும். தினசரி வேலைக்குச் சென்று, திரும்பும் தொழிலாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளிகள் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்கள், சுய வேலை செய்து வரும் சிறு சிறு வியாபாரிகள், உழைக்கும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்கவே திணறி வரும் போது, பயணிகள் ரயில் பயண வாய்ப்பைப் பறிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ‘போலத் துயரமானது.

கடந்த 11 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசு, இப்போது பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற முயல்வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற ,மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” என்று கேட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையம் அருகே உள்ளது ‘தம்மஸ்’ என்ற கிராமம்.சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கக் கட்டி மழை...

‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் நவ.2, 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி...

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த...
Do NOT follow this link or you will be banned from the site!