ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது… போர்க்கொடி தூக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

 

ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது… போர்க்கொடி தூக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது… போர்க்கொடி தூக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது என தகவல் மற்றம் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூர்தர்ஷனின் செயல்பாட்டை நிர்வகிக்கும் பிரசார் பாரதி சட்டம், பிரிவு 12 2(a)ல், நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் , அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளையும் நிலைநிறுத்துவதான் தூர்தர்ஷனின் நோக்கம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்க கொள்கைகளின் அடிப்படையில் நாட்டுக்காக நிறுவப்பட்ட தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தூர்தர்ஷன். ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள மத விழாவை ஒளிபரப்ப தூர்தர்ஷனை பயன்படுத்துவது தேசிய ஒருமைப்பாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு முரணானது.

ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது… போர்க்கொடி தூக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

அரசின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்படும் ஒரு ஒளிபரப்பு சேனலான தூர்தர்ஷனை, அயோத்தியில் நடைபெற உள்ள மத விழாவை ஒளிபரப்ப பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த கேஷத்ராவின் உறுப்பினர் காமேஷ்வர் சவுபால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இடதுசாரிகள் நாட்டில் அரசியல் நிலத்தை இழந்து விட்டனர். சீனாவில் அதன் தலைவர்கள் கூட இந்தியாவின் கடையை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒருவர் எதுவும் செய்ய முடியாதபோது, அவர்கள் அடிக்கடி இது போன்ற காட்டு உரிமைகோரல்களையும், கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.