புதிய கல்வி கொள்கை.. இந்திய கல்வியை தனியார் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.. கம்யூனிஸ்ட் கட்சி

புதிய கல்வி கொள்கை.. இந்திய கல்வியை தனியார் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.. கம்யூனிஸ்ட் கட்சி

புதிய கல்வி கொள்கை 2020யை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கூறியதாவது: எங்கள் கட்சி புதிய கல்வி கொள்கையை கேள்விக்கு உட்படுத்தும் அறிக்கையுடன் வந்துள்ளது. புதிய கல்வி கொள்கை இந்திய கல்வியை தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாதத்துக்கு வழி வகுக்கிறது.

புதிய கல்வி கொள்கை.. இந்திய கல்வியை தனியார் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.. கம்யூனிஸ்ட் கட்சி

இந்த புதிய கல்வி கொள்கை சமூகத்தின் பாதகத்திற்கும், சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கும் கல்வியின் அணுகலை இழக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. நாங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாடாளுமன்றத்தில் இது முறையாக விவாதிக்கப்படவில்லை. மேலும் அனைத்து கல்விகளும் ஒரே பட்டியலில் இருந்தபின்பும் இது மாநில அரசுகளுடனும் முறையாக விவாதிக்கப்படவில்லை.

புதிய கல்வி கொள்கை.. இந்திய கல்வியை தனியார் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.. கம்யூனிஸ்ட் கட்சி
இது நம் நாட்டின் கூட்டாட்சி அரசியலுக்கு எதிரான தாக்குதல். புதிய கல்வி கொள்கை முடிவை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுக்கிறது. இந்தியா மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட நாடு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை தவிர மற்ற மொழிகளும் இந்திய மொழிகளாக உள்ளன. அவை அனைத்தும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.