7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

 

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலை செய்யக்கோரி, சென்னை அம்பத்தூர் பிரித்திவாக்கம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது. இதில், கோவை பிரிக்கால் போராளி மா.சம்பத்குமார், மக்களுக்கான் இளைஞர் ஜே.ஆண்டனி தினகரன் ஆகிய இருவரும் வீட்டின் உள்ளே அமர்ந்து கடந்த 3 நாட்கலாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வந்தனர்.

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது


போராட்டத்தின் போது, சட்டமன்ற தீர்மானம் அடிப்படையில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக ஆளுநர் உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.