ரவுடி என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 போலீஸாருக்கு சிபிசிஐடி சம்மன்!

 

ரவுடி என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 போலீஸாருக்கு சிபிசிஐடி சம்மன்!

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 போலீஸாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி பிரபல ரவுடி சங்கர் சென்னை அயனாவரத்தில் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ரவுடி என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 போலீஸாருக்கு சிபிசிஐடி சம்மன்!

விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீடியோ எடுத்தனர். பின்னர் ரவுடி சங்கரை என்கவுன்டர் செய்த காவல் ஆய்வாளர் நடராஜன், காவலர் முபாரக், எஸ்ஐ யுவராஜ்,கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 7 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸார் ஆஜராகி என்கவுன்டர் குறித்து விளக்கமளித்தனர்.

ரவுடி என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 போலீஸாருக்கு சிபிசிஐடி சம்மன்!

இந்நிலையில் சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் மேலும் 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. பெண் காவலர் ஜெயந்தி,ஆய்வாளரின் ஓட்டுநர் காமேஷ், சதீஷ், சாட்சி பசுபதி உள்ளிட்ட ஆறு பேருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. 6 பேரும் செப்டம்பர் 10-ஆம் தேதி காலையில் எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.