பசுவதை தடைச்சட்டம் – இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

 

பசுவதை தடைச்சட்டம் – இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியின் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மூன்றில் இரு பங்கு இடங்களைப் பெற்றதால் பல்வேறு முடிவுகளை அதிரடியாக எடுத்து வருகிறது இலங்கை அரசு.

இலங்கை பிரதமர் ராஜபக்‌ஷே சில நாட்களுக்கு முன், பசுவதை சட்டம் குறித்து பேசியிருந்தார். கிராமங்களில் பால் தேவைக்காவும் விவசாயப் பணிகளுக்காவும் உள்ள்ட்ட காரணங்கள் கூறப்பட்டன. அதனால் விரைவில் அந்தச் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பசுவதை தடைச்சட்டம் – இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

பசுவதை தடை சட்டத்திற்கு இந்து மத அமைப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். குறிப்பாக, இலங்கை நாட்டின் சிவசேனை அமைப்பின் தலைவர் பசுவதை சட்டத்தை பாராட்டிப் பேசியிருந்தார். இலங்கையில் வாழும் சைவத்தைப் பின்பற்றுபவர்கள் இந்தச் சட்டத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் இந்தச் சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. ‘உணவு என்பது தனி மனித விருப்பம். இந்த உரிமையில் யாரும் குறுக்கீடக்கூடாது’ என்பதே அவற்றின் நிலைப்பாடாக இருந்தது.

பசுவதை தடைச்சட்டம் – இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில், நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில், பசுவதை தடைச் சட்டம் நடைமுறை படுத்துவதற்கான பத்திரம் முன் வைக்கப்பட்டது. அதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாடுகளைக் கொல்லக்கூடாது என்பதற்கு விவசாயப் பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்தல் என்பதே திரும்பவும் கூறப்பட்டிருக்கிறது. சிலர் இந்தியாவை திருப்தி படுத்த இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.