தடுப்பூசி விலை ‘இரண்டு மடங்கு’ அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

 

தடுப்பூசி விலை ‘இரண்டு மடங்கு’ அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது.

தடுப்பூசி விலை ‘இரண்டு மடங்கு’ அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகமாகி இருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிமேல் மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு தரப்பில் இருந்து, தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களுக்குமே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. செலவு அதிகமாக இருப்பதாக அந்நிறுவனங்கள் நிதி கோரியதன் பேரில், மத்திய அரசு மீண்டும் நிதி வழங்கியது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவில் ரூ.1,500க்கும் சீனாவில் ரூ.750க்கும் விற்பனையாகும் நிலையில் சீரம் நிறுவனம் தற்போது விலையை இருமடங்கு உயர்த்தியுள்ளது.