கொரோனா தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடக்கம்!

 

கொரோனா தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடக்கம்!

இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது. இதன் இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இங்கிலாந்து மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனையை நடத்திவருகின்றன. இது மனித உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் என்றும் கொரோனா பாதிக்கப்பட்ட செல்களை 28 நாட்களில் தடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடக்கம்!

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை இந்தியாவில் 16 இடங்களில் நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது.  ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 150 பேர் வீதம் தன்னார்வலர்கள் 300பேருக்கு தடுப்பு மருந்து சோதிக்கப்படவுள்ளது.