கோவை கொடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

 

கோவை கொடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

கோவை

கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கொடிசியா வர்த்தக வளாகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சிறப்பு தொடங்கியது. இ-ஹாலில் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

கோவை கொடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

இந்த முகாமில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டை, பேன் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த முகாமின்போது கோவிஷீல்டு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணைகளை செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர்.