சென்னை வந்தடைந்தது ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி!

சென்னை வந்தடைந்தது ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி!

கொரோனாவை தடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே இந்தியா கண்டுபிடித்த கோவாக்சின் மருந்து பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு பரிசோதனையை செய்ய ICMR மற்றும் DCGI சென்னையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, போரூர் தனியார் மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருக்கும் 300 பேருக்கு இந்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை வந்தடைந்தது ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி!

ஆக்ஸ்போர்டு பல்கலை, கண்டுபிடித்துள்ள இந்த கோவிஷீல்டு மருந்து, மனித உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் என்றும் கொரோனா பாதிக்கப்பட்ட செல்களை 28 நாட்களில் தடுக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

சென்னை வந்தடைந்தது ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி!

இந்த நிலையில், பரிசோதனை செய்வதற்காக 200 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னைக்கு வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து சென்னை வந்த மருந்துகளின் பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.