குழந்தைகளுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்? – மத்திய அமைச்சரின் நம்பிக்கை வார்த்தை!

 

குழந்தைகளுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்? – மத்திய அமைச்சரின் நம்பிக்கை வார்த்தை!

கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் நம் கண் முன்னே இருக்கும் ஒரே நிரந்தர தீர்வு தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறைந்து வருவதைச் சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பணியாற்றி வருகின்றன. மூன்றாம் அலை அக்டோபர் மாதத்தில் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் போதும். 2ஆம் அலையில் நிகழ்ந்த கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் தடுத்துவிடலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்? – மத்திய அமைச்சரின் நம்பிக்கை வார்த்தை!

தற்போது வரை கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னமும் பரிந்துரைக்கப்படவில்லை. ஒருசில தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிந்த 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படுகின்றன. 12 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படவில்லை.

Cabinet 2.0: All you need to know about India's new Health Minister |  udayavani

மூன்றாம் அலை வந்தால் குழந்தைகளைத் தாக்கும் என கூறப்படும் நிலையில், தடுப்பூசிகள் அவர்களுக்கு செலுத்தப்படவில்லை என்றால் அபாயம் ஏற்படலாம். இதனிடையே இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று காலை நடந்த பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி இதுதொடர்பாக கேட்டிருக்கிறார். அப்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.