கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

கொரோனாவின் முதல் அலை கொடுத்த அடி தாங்க முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். பொருளாதார ரீதியாகவும் மன ஆரோக்கிய ரீதியாகவும் நாட்டு மக்கள் அனைவருமே பெருமளவு பாதிக்கப்படிருக்கிறார்கள். ஓய்ந்து முடிந்துவிட்டது நாம் ஆயாசமாக அமர்ந்து கொண்டிருக்கும் போது தான் இரண்டாம் அலை தனது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

முதல் அலையைப் போல் அல்லாமல் இரண்டாம் அலை மிகவும் ஆபத்தானது என முன்னரே அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். முந்தையை வரலாற்றில் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற தொற்றின் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் தான் பல கோடி பேர் உயிரை விட்டனர். அந்தளவிற்குக் கொடிய அலையாக இரண்டாம் அலை பார்க்கப்படுகிறது. கொரோனா விஷயத்திலும் அது நிரூபணமாகியிருப்பது சற்றே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

இருப்பினும் ஸ்பானிஷ் ஃப்ளூ வந்த காலக்கட்டம் 1918. அந்தக் காலக்கட்டத்தில் இப்போது இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகள் இல்லை என்பதைத் தீர்க்கமாகச் சொல்ல முடியும். அப்போது தடுப்பூசிகள் இல்லை. ஆனால் இன்றோ ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் தடுப்பூசிகள் வந்துவிட்டன. இதுபோன்று பல்வேறு சாதகமான அம்சங்கள் நம்மிடம் இருப்பதை நினைத்து கொஞ்சம் சந்தோஷம் கொள்ளலாம். ஆனால் இதை நம்பி நாம் அசட்டையாகவும் இருக்க முடியாது. அதைத் தான் இரண்டாம் அலை உணர்த்தியிருக்கிறது. நினைத்ததை விட பயங்கரமான ஆபத்தாக மாறி நிற்கிறது கொரோனா.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

தற்போது பாதிக்கப்படுபவர்களின் தரவுகளை எடுத்துப் பார்க்கையில் 1 வயது முதல் 5 வயது குழந்தைகளைக் கொரோனா தாக்கிவருவதை மருத்துவ உலகினர் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று எச்சரிக்கும் குழந்தைகள் நல மருத்துவர்கள், இரண்டாம் அலை பரவலில் அதிகமான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலைக் கூறுகிறார்கள்.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கே பெரிய ஆபத்து – எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

இதுதொடர்பாக குழந்தைகள் நல ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் டிரென் குப்தா கூறுகையில், “2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் இருக்கும்போதே பாதிப்புக்குள்ளாகுகின்றனர். அதேபோல இளைஞர்களில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்றார்.