சரக்கு அடிக்காம இருக்க முடியல… தப்பி ஓடிய கொரோனா நோயாளியான கொலைக் குற்றவாளி!

 

சரக்கு அடிக்காம இருக்க முடியல… தப்பி ஓடிய கொரோனா நோயாளியான கொலைக் குற்றவாளி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை பெங்களூரில் நடைபெற்றுள்ளது

தனது நண்பரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக அந்த நபர் ஜூன் 19ஆம் தேதி கைது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

சரக்கு அடிக்காம இருக்க முடியல… தப்பி ஓடிய கொரோனா நோயாளியான கொலைக் குற்றவாளி!

புதன்கிழமை காலை அந்த நபர் கையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். கொரோனா வார்டில் இருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த செவிலியர்களையும் பாதுகாப்பு காவலர்களையும் தள்ளி விட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கேட்டில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் பிபிஇ சூட் அணிந்திருந்ததால் அவரை துரத்திப் பிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த நபர் மருத்துவமனையின் சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பிவிட்டார் என பெங்களூர் மருத்துவ கல்லூரி அதிகாரி ஸ்மிதா சகோ தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளி தப்பி ஓடியது அந்த மருத்துவமனை அதிகாரிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக வி.வி.புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தப்பு செட்டு தப்பிச்சென்ற அந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார்.

சரக்கு அடிக்காம இருக்க முடியல… தப்பி ஓடிய கொரோனா நோயாளியான கொலைக் குற்றவாளி!

தப்பிச் சென்ற அந்த நபர் தனது நண்பரைத் தொடர்புகொண்டு மதுபானம் வாங்கிவர சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் அவரது நண்பருக்குத் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என்பதால் மது குடிப்பதற்காக அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் அவரை கண்டுபிடித்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மது வாங்கி கொடுத்த அந்த நபரின் நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.