சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை: ஆரம்பமாகுமா பயிற்சி?!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை: ஆரம்பமாகுமா பயிற்சி?!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் ஐபிஎல் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மாதம் 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றது. 52 பேர் கொண்ட குழுவாக சென்ற சென்னை அணிக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. கொரோனா உறுதியானதால் சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டியில் பங்கேற்குமா என்றும் ஐபிஎல் நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தை அளித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை: ஆரம்பமாகுமா பயிற்சி?!

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், வீரர்கள் உட்பட சிஎஸ்கே அணி முழுவதும் தனிமை படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை: ஆரம்பமாகுமா பயிற்சி?!

சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் சென்னை அணி உதவியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் 3 ஆம் தேதி அடுத்த பரிசோதனைக்கு பின் தொற்று இல்லை என முடிவு வந்தால் பயிற்சிக்கு செல்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.