Home இந்தியா இப்படியே விட்டா அவ்ளோ தான்... கொரோனாவால் வரப்போகும் அபாயம்! - ஐநா ஷாக் ரிப்போர்ட்!

இப்படியே விட்டா அவ்ளோ தான்… கொரோனாவால் வரப்போகும் அபாயம்! – ஐநா ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் ஒடுங்கியபாடில்லை. இந்தியாவில் இரண்டாம் அலை வந்துகொண்டிருக்க பல்வேறு நாடுகளில் நான்காம் அலையைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. தடுப்பூசி வந்த பிறகாவது கட்டுப்படுமா என்று பார்த்தால் அப்போதும் கொரோனாவின் கோர தாண்டவம் அடங்கவில்லை. இப்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 12 கோடி பேர் பாதிக்கப்பட்டு 9 கோடி பேர் மீண்டுள்ளனர். 27 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். சிகிச்சைபெற்று வரும் 2 கோடி பேரில் 1 லட்சம் மக்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கோடைக்காலம் வந்தால் கொரோனாவின் தீவிரம் அடங்கிவிடும் என்று பரவலான கருத்துகள் கடந்த ஆண்டே பரவின. ஆனால் அப்போது தான் வெளுத்து வாங்கியது. இப்போதும் அந்தக் கருத்துகள் பரவிவருகின்றன. இச்சூழலில் ஐநா நிபுணர் குழு ஆராய்ச்சியின் முதற்கட்ட அறிக்கையில் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட் கூறப்பட்டுள்ளது. கொரோனா போகாமல் பல ஆண்டுகளாக இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தால் அது ஒரு வலுவான பருவகால நோயாக மாறும் என்று ஐநா நிபுணர் குழு எச்சரித்திருக்கிறது.

ஐநாவின் உலக வானிலை அமைப்பு 16 நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு உலக நாடுகள் முழுவதும் நிலவும் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப கொரோனா பரவும் வேகம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இறப்பு வீதம் ஆகியவற்றை ஆராய்ந்தது. அதேபோல வீசும் காற்றின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் தான் கொரோனா நீண்ட காலம் நீடித்திருந்தால் அது ஒரு மிக வலுவான சீசன் நோயாக மாறக்கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் இன்ஃப்ளுயன்ஸா வைரஸும், கோடைக்காலத்தில் ஜலதோசத்தை ஏற்படுத்தக் கூடிய சார்ஸ் வைரஸ் (கொரோனா) குடும்ப வைரஸ்களும் பரவும் தன்மை கொண்டவை. அந்த வரிசையில் சார்ஸ் கோவ்-2 வைரஸ் என்றழைக்கப்படும் கொரோனா வைரஸும் பருவக்கால நோயாக மாறும் என்று கூறுகின்றனர். கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. அந்தப் பாதிப்பு மீண்டும் நிகழாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews