கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

அருப்புக்கோட்டையில் கொரோனா சிகிச்சை என்ற பெயரில் ரூ.7.4 லட்சம் வசூல் செய்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் மற்ற நோயாளிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. டெஸ்ட், கன்சல்டேஷன், அறுவைசிகிச்சை, ஐ.சி.யு என பரபரப்பாக இருந்த தனியார் மருத்துவமனைகள் வெறிச்சோடின. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவே, சில நோயாளிகள் சௌகரியமான சிகிச்சை எதிர்பார்க்கவே தனியார் மருத்துவமனைகளுக்கு டார்ச் லைட் அடித்தது. சிறப்பு சிகிச்சை அளிக்க தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெற்றன.

கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
கொரோனாவுக்கு சிகிச்சையே இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனைகள் பரிசோதனை, பிபிடி கிட் பெயரில் பல லட்சங்களை கொள்ளை அடிப்பதாக புகார் எழுந்தது. சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை வெறும் 5 லட்சம் என்று அட்மிட் நேரத்தில் சொல்லிவிட்டு மீதி, 11 லட்சத்தை கொடுத்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்று அடாவடி காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நோயாளி ஒருவரிடம் இருந்து ரூ.7.4 லட்சம் வசூலிக்கப்பட்டது உறுதியானது

கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
ரூ.7.4 லட்சத்துக்கு என்ன என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தூக்கி தூரப்போட்டு அவர்களாக ஒருமாதிரியான சிகிச்சை வழங்கியிருப்பது தெரிந்தது. மேலும், சிறப்பு மருந்துகள் எதையும் அந்த மருத்துவமனை பயன்படுத்தாததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த சிட்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிட்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதியை விருதுநகர் கலெக்டர் கண்ணன் ரத்து செய்து உத்தரவிட்டார்.

கொரோனாவுக்கு ரூ.7.4 லட்சம் வசூல்… அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
தமிழகத்தில் ஒரு சில மருத்துவமனைகள் தவிர்த்து பெரும்பான்மையான மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.