மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு!

 

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மூன்றாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தாராளமாக தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையைப்போல், மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு!

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கொரொனா பாதிப்பால் இதுவரை 14 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.