15 மாநிலங்களில் 18+ தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைப்பு!

 

15 மாநிலங்களில் 18+ தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைப்பு!

போதிய தடுப்பூசிகள் இல்லாததால் 15 மாநிலங்களில் 18+ தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

15 மாநிலங்களில் 18+ தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைப்பு!

இந்தியாவே கொரோனாவுக்கு எதிரான போரில் சிக்கிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து செல்கிறது. உயிரிழப்புகள் 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் மே. 1 ஆம் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், தெலங்கானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கோவா, அருணாச்சல பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் 18+ தடுப்பூசி திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 18 வயதானவர்கள் தடுப்பூசி போட மே மூன்றாம் வாரம் வரை காத்திருக்க வேண்டுமென பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துள்ளன.