இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு

 

இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு

லண்டன்: இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது இங்கிலாந்து தனது மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கையை 55-ஆக பதிவு செய்துள்ளது. இது மார்ச் 23 முதல் நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்ததைவிட மிகக் குறைந்த அளவாகும். லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா நோயால் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 40,597-ஆக உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக கொரோனாவால் புதிய இறப்புகள் எதுவும் நிகழவில்லை. ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஏற்கனவே பேசுகையில், பிராந்தியத்தின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் ஜூன் 18 அன்று மேலும் குறையும் என்று நம்புவதாகக் கூறினார்.