தலைமைச் செயலகம் மூடப்பட்டது! ஏன் தெரியுமா?

 

தலைமைச் செயலகம் மூடப்பட்டது! ஏன் தெரியுமா?

கொரோனா தடுப்பு பணிக்கான தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் மூடப்பட்டது! ஏன் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. உயிர் பலிகளும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் மேலும் 3,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1,205 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 64 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 4,143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தலைமைச் செயலகம் மூடப்பட்டது! ஏன் தெரியுமா?

இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 11 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுகிறது. தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.