சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்க… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

 

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்க… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜூலை மாதம் நடத்தப்பட உள்ள மற்ற தேர்வுகளை ரத்து செய்ய முடியுமா என்பதை பரிசீலனை செய்யமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகம் நிலுவையிலுள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இன்னபிற தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்க… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜூலை மாதம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் செவ்வாய்க்கிழமை இது தொடர்பான பதிவினை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.