ஊரடங்கில் பணிநீக்கம்: தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்!

ஊரடங்கில் பணிநீக்கம்: தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா. இவருடன் சேர்த்து இன்னும் நான்கு பேரை பள்ளி நிர்வாகம் பணியில் திருப்தி இல்லை என கூறி பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து கூறிய வெங்கட சுப்பையா, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க சொல்வதை காட்டிலும் மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்த கூறுகிறார்கள். அதை செய்ய தவறியதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரடங்கில் பணிநீக்கம்: தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்!

இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆசிரியர் வெங்கட சுப்பையா தற்போது வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார். இதையடுத்து இதை அறிந்த அவரின் முன்னாள் மாணவர்கள் 150 பேர் இணைந்து அவருக்கு 86300 ரூபாயை கொடுத்து உதவியுள்ளனர்.

ஊரடங்கில் பணிநீக்கம்: தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்!

ஆசிரியரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர்.