மூணாவது அலை கொரானா வந்தாலும் செலவில்லாமல் துரத்தியடிக்கும் மூணு விஷயம் .

 

மூணாவது அலை கொரானா வந்தாலும்  செலவில்லாமல் துரத்தியடிக்கும் மூணு விஷயம்  .

கொரோனாவின் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் குறைந்து வரும் போதிலும், பாதிப்புகள் இன்னும் உள்ளது. இந்த அலையின் போது, பெருமளவிலான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இதில் ஒரு நிம்மதி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் குணமடைந்தும் வருகிறார்கள். 

இருப்பினும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டாலும்,  பெரும்பாலான, மக்களுக்கு சோர்வு அதிகம் உள்ளதாகவும், பலவீனமாக உணர்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,மூணாவது அலை கொரானா வந்தாலும்செலவில்லாமல் துரத்தியடிக்கும் மூணு விஷயம்:

1.இரவு வெகுநேரம் கழித்துத் தூங்குகிறீர்களா? காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா? இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா? போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா? ஆமெனில் இதயத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இரவில் பெறும் நல்ல ஓய்வினால், இரத்த அழுத்தம் குறைந்து சீரற்ற இதயத் துடிப்பினையும் குறைக்கிறது. இரவில் நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு, இதய பாதிப்புகளும் மாரடைப்பும் வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகும் .ஆகவே நாள்தோறும் இரவில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்குவதில்லை என்றால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியான அல்லது உடல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியும்.

2.வண்ணமயமான உணவுகளைத் தவிர்த்தல்

பழங்களிலும் காய்கறிகளிலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் சோடியத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது பொட்டாசியத்தைக் கூட்டுவது. எனவே அதிக அளவு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பொட்டாசியத்தின் அளவும் கூடுகிறது. பொட்டாசியமானது சோடியத்தின் விளைவுகளைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே வெறும் சாதத்தினை மட்டும் உண்பதுடன், வண்ணமயமான காய்கறிகளையும் ,பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 52% குறைவு மட்டுமல்லாமல் இம்மியூனிட்டி பவரும் அதிகரிக்கும்  என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.போதுமான அளவு நடக்காதிருத்தல்

குறைந்த அளவு தூரத்தினைக் கடப்பதற்குக் கூட நடந்து செல்லாமல், காரில் சென்றீர்களானால், இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளைச் செய்கிறீர்கள் என்று பொருள். ஆகவே கடைகளுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது ஏதாவது சொந்த வேலைகளுக்கோ செல்லும் போது காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால், 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ததற்கு சமானம். எனவே போதுமான அளவு நடப்பது இந்த நோய் தொற்று காலத்தில் அவசியம்.மேலும் அடுத்த அலை கொரானா வந்தாலும் உடலில் பாதிக்காமல் தடுக்கலாம் .