கொரோனாவால் பொருளாதார நெருக்கடி: 100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் உதவி – உலக வங்கி அறிவிப்பு

 

கொரோனாவால் பொருளாதார நெருக்கடி: 100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் உதவி – உலக வங்கி அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனாவால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 50 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 20 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

கொரோனாவால் பொருளாதார நெருக்கடி: 100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் உதவி – உலக வங்கி அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் உலகளவில் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும் என்று உலக வங்கி கூறியுள்ளது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 வளரும் நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியுதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியுள்ளார். மேலும் உலகளவில் வறுமை ஒழிப்பில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றத்தின் பெரும் பகுதியை கொரோனா வைரஸ் தொற்றுநோய் அழித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.