6 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா: ஐநா

 

6 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா: ஐநா

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவிலான உற்பத்தியில் 637 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொடிய வகை கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இது வரை 5,024 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 76,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பதற்காக ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

6 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா: ஐநா

இந்நிலையில் நியூயார்க்கில் வளர்ச்சிக்கான நிதிஉதவி குறித்த உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கொரோனா பாதிப்பு 6 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டதாகவும், உலகின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சரிபாதியளவு அதாவது 160 கோடி பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் கூறினார். மேலும், இந்த வைரஸால் உலகளவில் உற்பத்தியில் 637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் ஆண்டனியோ குட்டரெஸ் குறிப்பிட்டார். 1930ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரு மந்த நிலைக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை இது எனவும் குட்டரெஸ் கூறியுள்ளார்.