திடீர் ட்விஸ்ட்… உருமாறிய கொரோனாவை போட்டுத்தள்ளும் கோவாக்சின்! – ஆய்வில் தகவல்!

திடீர் ட்விஸ்ட்… உருமாறிய கொரோனாவை போட்டுத்தள்ளும் கோவாக்சின்! – ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் அதிக பாதிப்புகள், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்பை விட ஆக்சிஜன் சிலிண்டர்களும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இதனால் நாடே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது.

திடீர் ட்விஸ்ட்… உருமாறிய கொரோனாவை போட்டுத்தள்ளும் கோவாக்சின்! – ஆய்வில் தகவல்!

இரண்டாம் அலைக்கு இந்தியாவில் இரட்டை உருமாற்றமடைந்த கொரோனா தான் காரணமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் தோன்றிய வைரஸைக் காட்டிலும் தற்போது உருமாற்றமடைந்தது பரவும் வேகமும் அதன் வீரியமும் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை முன்வைத்து தான் இந்தியர்கள் பிரிட்டன் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்தியாவை அபாயகரமான நாடுகளின் பட்டியலிலும் சேர்த்தது.

திடீர் ட்விஸ்ட்… உருமாறிய கொரோனாவை போட்டுத்தள்ளும் கோவாக்சின்! – ஆய்வில் தகவல்!

இதற்கு நடுவே உருமாற்றமடைந்த கொரோனாவை கோவாக்சின் தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது. வைரஸ் உருமாற்றமடைந்தாலும் தனது அடிப்படையான ஸ்பைக் புரதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி உருமாற்றமடைந்த கொரோனாவையும் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) இன்று வெளியிட்டது.

திடீர் ட்விஸ்ட்… உருமாறிய கொரோனாவை போட்டுத்தள்ளும் கோவாக்சின்! – ஆய்வில் தகவல்!

ஏற்கெனவே தடுப்பூசி செலுத்துவது தான் கொரோனாவை தடுக்க முக்கிய ஆயுதம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தியிருக்கிறது. தடுப்பூசி விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதேபோல கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகப்படுத்தியுள்ளன.